தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் மேலும் 21 பேர் கைது - தேசிய புலனாய்வு முகமை

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் தொடர்புடையதாகக் கூறி தேசிய புலனாய்வு முகமையினர் மேலும் 21 பேரை கைதுசெய்துள்ளனர்.

NIA conducts searches in 5 locations in Kerala in gold smuggling case
NIA conducts searches in 5 locations in Kerala in gold smuggling case

By

Published : Nov 20, 2020, 5:49 PM IST

டெல்லி:கடந்த ஜூலை மாதம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கும்விதமாக அரபு நாடுகளிலிருந்து ராஜாங்க பொருள்கள் வழியே 15 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் திருவனந்தபுரம் விமான நிலையம் வழியாக கேரளாவிற்கு கடத்தப்பட்டது தெரியவந்தது. இந்த விவகாரத்தில் ஸ்வப்னா சுரேஷ் அவருக்கு உதவியவர்கள் உள்ளிட்ட பலரும், அரசு அலுவலர்கள், முதன்மைச் செயலக அலுவலர்கள் எனப் பலரும் தேசிய புலனாய்வு முகமையின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய பலர் காவலில் எடுக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுவருகின்றனர். இந்நிலையில், தேசிய புலனாய்வு முகமையினர் இந்த வழக்கில் தொடர்புடைய ஐந்து குற்றவாளிகளின் இருப்பிடங்களில் சோதனை நடத்திவருகின்றனர்.

இந்தச் சோதனையின்போது பல்வேறு மின்னணு பொருள்களும், ஆவணங்களும் சிக்கியுள்ளதாக தேசிய புலனாய்வு முகமையினர் தெரிவித்துள்ளனர். மேலும், சோதனையின்போது 21 பேரை கைதுசெய்துள்ளனர்.

இதையும் படிங்க:கேரள தங்கக் கடத்தல் வழக்கு: 4 பேருக்கு ப்ளூ கார்னர் நோட்டீஸ்!

ABOUT THE AUTHOR

...view details