மேற்கு வங்க மாநிலம், மூர்ஷிதாபாத், கேரள மாநிலம் எர்ணாகுளம் ஆகிய பகுதிகளில் இருந்து அல்-கய்தா அமைப்பைச் சேர்ந்து ஒன்பது நபர்கள் தேசியப் புலனாய்வு முகமை (என்ஐஏ) காவலர்களால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில் இவர்கள் அனைவரும் பாகிஸ்தானில் இயங்கி வரும் அல்-கய்தா தீவிரவாத அமைப்பால் சமூக வலைதளங்கள் மூலம் இயக்கப்பட்டு வந்தது தெரிய வந்துள்ளது.