ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் காவல் துணைக்கண்காணிப்பாளர் தவீந்தர் சிங், தடைசெய்யப்பட்ட ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த நவின் பாபு, வழக்குரைஞர் இர்பான் மிர் ஆகியோர் தெற்கு காஷ்மீரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருக்கும்போது காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்த ஆயுதங்களையும் காவல் துறையினர் கைப்பற்றினர். பயங்கரவாத அமைப்புடன் தவீந்தர் சிங்குக்குத் தொடர்பு இருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், இது தொடர்பான வழக்கை தேசிய புலனாய்வு முகமை (NIA) விசாரிக்க உள் துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இந்நிலையில், பயங்கரவாதியாக சந்தேகிக்கப்படும் தாரிக் அகமது மீர் என்பவரை தேசிய புலனாய்வு முகமை கைதுசெய்துள்ளது.