தமிழ்நாடு

tamil nadu

பெங்களூரு கலவரத்தில் தொடர்புடைய முக்கிய நபர் கைது!

By

Published : Sep 25, 2020, 10:58 AM IST

பெங்களூரு: தேசிய புலனாய்வு முகமை பெங்களூரு கலவரத்தில் தொடர்புடைய சையது சாதிக் அலி என்ற முக்கிய நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

violence
violence

கர்நாடக தலைநகரம் பெங்களூருவில் உள்ள புலிகேசிநகர் தொகுதியின் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் அக்ஹாந்தா சீனிவாசமூர்த்தியின் உறவனரான நவீன் என்பவர் சிறுபான்மை மக்களை அவதூறாக குறிப்பிட்டு தனது முகநூலில் பதிவிட்டதாக தெரிகிறது.

இதுதொடர்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி எஸ்டிபிஐ, பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா, உள்ளிட்ட கட்சியினர் அந்த பதிவை கண்டித்து நடத்திய போராட்டத்தில் சீனிவாசமூர்த்தியின் வீட்டை போராட்டக்காரர்களில் சிலர் தீயிட்டு கொளுத்தினர், மேலும் பொதுமக்கள், காவல் துறையினர் வாகனங்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டதில் தீக்கிரையானது.

இந்த கலவரத்தில் மூன்று நபர்கள் கொல்லப்பட்டனர், மேலும் அப்பகுதியில் இருந்த கே.ஜி. ஹள்ளி காவல் நிலையமும் கடுமையாக தாக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு போராட்டம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அச்சம்பவத்தைத் தொடர்ந்து அதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் கலவரத்தில் தொடர்புடைய கிட்டத்தட்ட 400 பேரை கைது செய்தனர்.

இந்நிலையில் கடந்த புதன்கிழமை அன்று கலவரம் தொடர்பாக இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த தேசிய புலனாய்வு முகமை அலுவலர்கள் கலவரத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் சையது சாதிக் அலி (44) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:வன்முறையில் முடிந்த பேஸ்புக் பதிவு; பெங்களூருவில் ஊரடங்கு அமல்! துப்பாக்கிச் சூட்டில் மூவர் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details