தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நிதி அமைச்சகத்துக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் கடிதம்!

டெல்லி: கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்வதால் சுகாதார ஊழியர்களுக்கு போதிய மருத்துவ வசதியை அரசாங்கம் செய்து தர வேண்டும் என தேசிய மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

தேசிய மனித உரிமைகள் ஆணையம் கடிதம்
தேசிய மனித உரிமைகள் ஆணையம் கடிதம்

By

Published : Jun 13, 2020, 9:27 PM IST

உலகளவில் ஒப்பிட்டு பார்க்கையில் கரோனா பாதிப்பில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் சுகாதார ஊழியர்களின் உயிரை கவனத்தில் கொள்ள வேண்டும் என தேசிய மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து நிதி அமைச்சகத்துக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் எழுதியுள்ள கடிதத்தில், “மருத்துவ காப்பீடு திட்டம் சில சுகாதார ஊழியர்களுக்கு மட்டும் தான் உள்ளது. இதனை மாற்றி அணைத்து சுகாதார ஊழியர்களுக்கும் மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளது.

மேலும், நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த மத்திய நிதி அமைச்சகம் திட்டங்களை அறிவித்து போல், சுகாதார ஊழியர்களுக்கும் திட்டங்களை அறிவிக்கவேண்டும் எனவும் நிதி அமைச்சகத்திடம் தேசிய மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ராஜஸ்தானை குறிவைக்கும் பாஜக: பரபரப்பாகும் அரசியல் களம்

ABOUT THE AUTHOR

...view details