தேசிய மனித உரிமை ஆணையத்தின் (என்.ஹெச்.ஆர்.சி.) தலைவரும், ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியுமான ஹெச்.எல். தத்து தலைமையில், தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் முழுமையான சட்டப்பூர்வ கூட்டம் டெல்லியல் இன்று நடைபெறுகிறது.
மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தின் 12ஆவது பிரிவு திருத்தப்பட்டதற்குப் பின் முதல் முறையாக இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், மாற்றுத்திறனாளிகள் நல ஆணையம் ஆகியவற்றின் தலைவர்கள் புதிய திருத்தத்தின் அடிப்படையில் தேதிய மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.