தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மத்திய நிதி அமைச்சகத்துக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் - காப்பீட்டு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம்

டெல்லி: சுகாதார பணியாளர்ளுக்கு  மருத்துவ காப்பீடு திட்டம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக் கூறப்படும் விவகாரத்தில் விளக்கமளிக்க மத்திய நிதி அமைச்சகத்துக்கும், ஐஆர்டிஏவிற்கும் தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

NHRC notices to Fin Min, IRDA over heath workers facing 'refusal' on mediclaim policies
NHRC notices to Fin Min, IRDA over heath workers facing 'refusal' on mediclaim policies

By

Published : Jun 13, 2020, 12:42 AM IST

அந்த நோட்டீஸில், ”கரோனா அல்லாத மற்ற நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் தனியார் சுகாதார பணியாளர்களுக்கு இந்த காப்பீடு திட்டம் பெற முடியுமா? முடியாதா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

பெரும்பாலான மருத்துவர்களுக்கு உரிய மருத்துவ காப்பீடு திட்டம் இருந்தாலும், மற்ற சுகாதார பணியாளர்களுக்கு இந்த காப்பீடு திட்டம் பெறுவதில் தெளிவின்மை உள்ளது. எனவே இதுதொடர்பாக நான்கு வாரங்களுக்குள் உரிய விளக்கமளிக்க மத்திய நிதியமைச்சகத்திற்கும், காப்பீட்டு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையத்திற்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details