டெல்லி: கொத்தடிமை தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வுக்கான வழிகாட்டுதல்களை உருவாக்குவது குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் பரிசீலிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கொத்தடிமைகளுக்கான மறுவாழ்வு: மனித உரிமைகள் ஆணையம் வழிகாட்டுதல்களை தயார் செய்ய உத்தரவு - guidelines to protect bonded labourers during COVID-19
கொத்தடிமைத் தொழிலாளர்கள் 187 பேருக்கு உடனடியாக உதவ நடவடிக்கை எடுக்க உத்தரப் பிரதேசம், பிகார் அரசு அலுவலர்கள் தவறிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், கோவிட்-19 தொற்றுநோய்களின் போது, மனித உரிமைகள் ஆணையம் பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வுக்கான வழிகாட்டுதல்களை உருவாக்குவது குறித்து பரிசீலிக்கலாம் என்று கூறியுள்ளது.
![கொத்தடிமைகளுக்கான மறுவாழ்வு: மனித உரிமைகள் ஆணையம் வழிகாட்டுதல்களை தயார் செய்ய உத்தரவு corona migrant labour](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-11:00-tn-tpr-01-migrantlabourersissue-splstory-vis-7204381-07062020112807-0706f-00415-701.jpg)
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல் நாகேஸ்வர ராவ் மற்றும் கிருஷ்ணா முராரி ஆகியோர் அடங்கிய அமர்வில் காணொலி காட்சி வாயிலாக விசாரணைக்கு வந்த இம்மனுவில், உத்தரப் பிரதேசம், பிகார் மாநிலங்களில் செங்கல் சூளைகளில் பணிபுரியும் 187 கொத்தடிமைத் தொழிலாளர்களுக்கு அரசு அலுவலர்கள் உதவி செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்த மனுவை தள்ளுபடி செய்த அமர்வு, தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஏற்கனவே இவ்விவகாரத்தில் வழிகாட்டுதல்களை நிறைவேற்றியுள்ளதைக் சுட்டிக்காட்டி, மேலதிக வழிமுறைகளையும், வழிகாட்டுதல்களையும் ஆணையமே நிறுவி செயல்படுத்துமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.