தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புலம்பெயர் தொழிலாளர்கள் விபத்து - உ.பி. அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் - தேசிய மனித உரிமை ஆணையம்

லக்னோ: ஆரையா மாவட்டத்தில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட சாலை விபத்து குறித்து உத்தரப் பிரதேச அரசு அறிக்கை தாக்கல் செய்யக்கோரி தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

உ.பி. அரசுக்கு புலம்பெயர் தொழிலாளர்கள் விபத்து குறித்து நோட்டீஸ்
உ.பி. அரசுக்கு புலம்பெயர் தொழிலாளர்கள் விபத்து குறித்து நோட்டீஸ்

By

Published : May 23, 2020, 12:28 AM IST

கடந்த சனிக்கிழமை (16/5/20) அன்று பஞ்சாபிலிருந்தும் ராஜஸ்தானிலிருந்தும் புலம்பெயர் தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு வந்த ட்ரக்குகள் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் ஆரையா மாவட்டம், நெடுஞ்சாலையில் நேருக்கு நேருக்கு மோதி விபத்துக்குள்ளானது.

அதில் பயணம் செய்த சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்டோரில் 26 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். 30 பேர் படுகாயம் அடைந்தனர். அப்போது படுகாயம் அடைந்தவர்களுடன் உயிரிழந்தவர்களை ஒன்றாக, ஒரே ட்ரக்கில் ஏற்றி அனுப்பி வைத்துள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உத்தரப்பிரதேச அரசின் இந்தச் செயலை தேசிய மனித உரிமை ஆணையம் வன்மையாக கண்டித்தது. மேலும் அம்மாநில அரசின் செயல் தர்மத்திற்கு எதிரானது மட்டுமல்ல; மனிதாபிமானமற்றது என்று கூறி தாமாக முன்வந்து இது தொடர்பாக அம்மாநில அரசு மற்றும் தலைமைச் செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதுகுறித்து உத்தரப்பிரதேச அரசு அடுத்த நான்கு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details