டெல்லி:வாகன ஓட்டுநரின் மரணத்திற்கு காரணமான காவல் அலுவலர்களுக்கு எதிராக இழப்பீடு மற்றும் துறை ரீதியான நடவடிக்கைகளை வழங்குவதில் டெல்லி காவல்துறை தலைவரின் "குறைபாடுள்ள அணுகுமுறை" குறித்து அதிருப்தி தெரிவித்த தேசிய மனித உரிமை ஆணையம் டிசம்பர் 29ஆம் தேதிக்கு முன்னர் ஆஜராகுமாறும் சம்மன் அனுப்பியுள்ளது.
உச்சநீதிமன்ற வழக்குரைஞரும் மனித உரிமை ஆர்வலருமான ராதகாந்த திரிபாதி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்யும் போது, இறந்தவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு மூன்று லட்சம் ரூபாய் செலுத்தியதற்கான ஆதாரத்துடன் கூடிய ஆவணத்தையும் அறிக்கையையுடன் இணைக்க வேண்டும் என என்.ஹெச்.ஆர்.சி கோரியுள்ளது.
முன்னதாக தேசிய மனித உரிமை ஆணையம், “பாதிக்கப்பட்டவரின் உயிரைக் காப்பாற்றக்கூடிய நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட காவல் அலுவலர்கள் எடுக்கவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.