கரோனா வைரஸ் தொற்றுக்கு நாடு முழுவதும் தற்போது வரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,076 பேர் நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோவிட்-19: சுங்கச்சாவடிகள் இயங்க மத்திய அரசு அனுமதி - nhai resumes tolling operation from april 20
டெல்லி: கரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் மூடப்பட்டுள்ள சுங்கச்சாவடிகள் மீண்டும் இயங்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
![கோவிட்-19: சுங்கச்சாவடிகள் இயங்க மத்திய அரசு அனுமதி தேசிய சாலை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6835435-717-6835435-1587147018670.jpg)
தேசிய சாலை
இந்நிலையில், வரும் காலங்களில் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையைக் குறைக்கவும், நாட்டை பழைய நிலைக்கு மாற்றிடவும் மத்திய அரசும், அந்தந்த மாநில அரசுகளும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
இதற்கிடையே, ஊரடங்கு உத்தரவினால் நாடு முழுவதும் மூடப்பட்டுள்ள சுங்கச்சாவடிகள் மீண்டும் இயங்குவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.