நாடு முழுவதும் கரோனா பாதிப்பை போர்க் கால அடிப்படையில், மருத்துவர்கள் தீவிரமாக எதிர்கொண்டு வருகின்றனர். இந்தச் சூழலில் கரோனாவால் மருத்துவக் கழிவுகள் வழக்கத்தை விடவும் பன்மடங்கு பெருகும் அபாயம் எழுந்துள்ளது.
இதன் தாக்கம் சுற்றுச்சூழல் மற்றும் பொதுச்சுகாதாரத்தை நேரடியாக பாதிக்கும் என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் மத்திய, மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவர் ஆதர்ஷ் குமார் கோயல், இந்த விவகாரம் குறித்து மாநில அரசுகளுக்கு முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளார்.