இந்திய ரயில்வே துறையில் தனியார் ரயில்கள் இயக்குவது தொடர்பான முடிவுகள் கடந்தாண்டு எடுக்கப்பட்டது. அதன்படி அக்டோபர் 2019ஆம் ஆண்டு டெல்லி - லக்னோ இடையே முதலாவது தனியார் ரயில் இயக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மும்பை - அகமதாபாத் இடையே ஜனவரி 2019ஆம் ஆண்டு, தனியார் ரயில் இயக்கப்பட்டது.
இவ்விரு வழித்தடங்களில் இயங்கும் தேஜாஸ் ரயில், ஐ.ஆர்.சி.டி.சி. (IRCTC)-ஆல் இயக்கப்படுகிறது. தனியார் ரயிலுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், மூன்றாவதாக எந்த வழித்தடத்தில் தனியார் ரயில் இயக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே நிலவியது.