தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இன்றைய செய்திகள் மற்றும் நிகழ்வுகளின் தாெகுப்பு!#EtvBharatNewsToday - news today

இன்றைய செய்திகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்பை இங்கு காணலாம்.#EtvBharatNewsToday

news today
news today

By

Published : Sep 3, 2020, 5:58 AM IST

Updated : Sep 3, 2020, 7:36 AM IST

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்:

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று காணொலி வாயிலாக காலை 10.30 மணியளவில் நடைபெறவுள்ளது. இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின், செப்டம்பர் 1ஆம் தேதி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

ரயில் டிக்கெட் முன்பதிவு:

தமிழ்நாட்டில் பயணிகள் ரயில் போக்குவரத்துக்கு அரசு அனுமதி கொடுத்ததையடுத்து, இன்று (செப்டம்பர் 3) முதல் டிக்கெட் முன்பதிவு மையங்கள் திறக்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. செப்டம்பர் 7ஆம் தேதி முதல் இந்த ரயில் போக்குவரத்து சேவை தொடங்குகிறது.

ரயில் டிக்கெட் முன்பதிவு

சென்னையில் மின் தடை:

பராமரிப்பு பணி காரணமாக பெசன்ட் நகர், அடையாறு இந்திரா நகர், பாலவாக்கம், பொன்னேரி ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் 2 மணி வரை மின் தடை என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மின் தடை

சட்டப்பேரவை தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம்:

தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நடத்துவது தொடர்பாக தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்தியபிரத சாகு தலைமையில், இன்று மாலை 3 மணியளவில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து தமிழ்நாட்டில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சட்டப்பேரவை தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம்

அமெரிக்க - இந்திய உச்சி மாநாடு: மோடி உரை

அமெரிக்க - இந்திய உத்திகள் வகுத்தல் மற்றும் பங்கேற்றல் அமைப்பின் 3ஆவது வருடாந்திர உச்சி மாநாட்டில் இன்று பிரதமர் மோடி உரையாற்றவுள்ளார். இரவு 9 மணியளவில் காணொலி காட்சி வாயிலாக இந்த மாநாடு நடைபெறவுள்ளது.

அமெரிக்க - இந்திய உச்சி மாநாடு: மோடி உரை
Last Updated : Sep 3, 2020, 7:36 AM IST

ABOUT THE AUTHOR

...view details