மதுரையில் முழு ஊரடங்கு
கரோனா தொற்று வேகமாகப் பரவிவருவதால், மதுரையில்ஜூன் 24 முதல் 30ஆம் தேதி வரை ஏழு நாள்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் தினம் 2020
கரோனா தொற்று காரணமாக ஒலிம்பிக் போட்டிகள் தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று ஒலிம்பிக் தினம் கொண்டாடப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் தினத்தையொட்டி ஒர்க்-அவுட் செய்வார்கள் எனவும் ஒலிம்பிக் குழு அறிவித்துள்ளது.
லே செல்கிறார் ராணுவ தலைமைத் தளபதி எம்.எம். நரவணே
இந்திய - சீன எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பதற்றம் நிலவிவரும் வேளையில், இது குறித்து அறிய ராணுவ தலைமைத் தளபதி எம்.எம். நரவணே இன்று காஷ்மீரின் லே பகுதிக்குச் செல்கிறார்.
ராணுவ தலைமைத் தளபதி எம்.எம். நரவணே புதுச்சேரியில் கடைகள், வணிக நிறுவனங்கள் இயங்கும் நேரத்தில் மாற்றம்
கரோனா அச்சுறுத்தல் காரணமாக கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவை காலை 6 மணிமுதல் மதியம் 2 மணிவரை மட்டுமே செயல்பட வேண்டும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்திருந்தார். இன்று (ஜூன் 23) முதல் இது நடைமுறைக்கு வருகிறது.
புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி பிளிப்கார்ட் நிறுவனத்தின் சிறப்பு விற்பனை தொடக்கம்
பிரபல ஆன்லைன் வர்த்தகத் தளமான பிளிப்கார்ட் தனது சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது. இன்றிலிருந்து ஜூன் 27ஆம் தேதிவரை நான்கு நாள்களுக்கு இந்தச் சிறப்பு விற்பனை நடைபெறும். பொதுமக்கள் அந்நிறுவனத்தின் சிறப்புச் சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம் போராட்டம்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின்கீழ், வேலை நாள்களை 200ஆக உயர்த்த வேண்டி இன்று (ஜூன் 23) திருவாரூர் மாவட்டம் முழுவதும் ஊராட்சி ஒன்றியம் அருகே தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம் போராட்டம் நடத்தவுள்ளது.
தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம் பூரி ஜெகன்நாதர் ரத யாத்திரை இன்று தொடக்கம்
ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள பிரசித்திப் பெற்ற ஜெகன்நாதர் கோயில் ரத யாத்திரை இன்று தொடங்குகிறது. உச்ச நீதிமன்றம் அளித்த அனுமதியின்பேரில் இது நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
பூரி ஜெகன்நாதர் கோயில் ரத யாத்திரை