விவசாயிகளுக்கான குளிர்சாதன சரக்கு ரயில் சேவை தொடக்கம்:
விரைவில் கெட்டுப்போகக்கூடிய பொருட்களை விவசாயிகள் எடுத்துச் செல்வதற்காக குளிர்சாதன சரக்கு ரயில் சேவை இன்று முதல் தொடங்குகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் இதுகுறித்து அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
விவசாயிகளுக்கான குளிர்சாதன சரக்கு ரயில் சேவை தொடக்கம் வேளாண் பல்கலையில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்:
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இளநிலை படிப்புக்கு சேர விரும்பும் மாணவர்கள், இன்று முதல் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வேளாண் பல்கலையில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் கலைஞர் கருணாநிதி நினைவு தினம்:
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 2ஆம் ஆண்டு நினைவு தினம்.
கலைஞர் கருணாநிதி நினைவு தினம் முதலமைச்சர் அடிக்கல் நாட்டவுள்ள திட்டப் பணிகள்:
பொதுப்பணித் துறை, வேளாண்மைப் பொறியியல் துறை, ஊராட்சித் துறை ஆகிய மூன்று துறைகளின் கீழ் ஆறு திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டவுள்ளார்.
முதலமைச்சர் அடிக்கல் நாட்டவுள்ள திட்டப் பணிகள் திருநெல்வேலி, தென்காசியில் முதலமைச்சர் ஆய்வு:
கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு மேற்கொள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு செல்கிறார்.
திருநெல்வேலி, தென்காசியில் முதலமைச்சர் ஆய்வு