இன்றைய செய்திகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்பு #EtvBharatNewsToday - சூர்யாவின் 45ஆவது பிறந்தநாள்
இன்றைய செய்திகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்பை இங்கு காணலாம்.
News Today @ July 23
போக்குவரத்து கூட்டமைப்பு சங்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டம்
அமெரிக்கா - இந்தியா இடையே பயணிகள் விமான சேவை தொடக்கம்
கரோனா சூழல் காரணமாக பயணிகள் விமான சேவை ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், அமெரிக்கா - இந்தியா இடையேயான விமான சேவை இன்று முதல் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
வக்ஃபு வாரிய தேர்தல் - வேட்மனுக்களுக்கான கடைசி நாள்
வக்ஃபு வாரிய தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய இன்றே கடைசி நாளாகும். இதுகுறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு சமீபத்தில் வெளியிட்டது. வேட்புமனுக்களை திரும்பப் பெற ஜூலை 29 கடைசி நாளாகும். ஜூலை 30ஆம் தேதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சூர்யாவின் 45ஆவது பிறந்தநாள்
நடிகர் சூர்யா தனது 45ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். ட்விட்டரில் அவரது வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
இன்று முதல் கொடைக்கானலில் முழு ஊரடங்கு
கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கொடைக்கானலில் அதிகரித்துவருவதை தொடர்ந்து இன்று முதல் ஜூலை 29ஆம் தேதி வரை அங்கு முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.