6 மாவட்டங்களில் முழு ஊரடங்கு
தமிழ்நாட்டில் கரோனா பரவல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களிலும் ஜூன் 21, ஜூன் 28 ஆகிய தேதிகளில் தளர்வின்றி முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. தற்போது மதுரை, தேனியிலும் நிலைமை மோசமாகியுள்ளதால், இந்த 6 மாவட்டங்களிலும் இன்று எவ்வித தளர்வுமின்றி முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக மத்திய அரசை கண்டித்து இன்று மாவட்ட வாரியாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் அழகிரி தெரிவித்திருந்தார். அதன்படி இன்று காங்கிரஸ் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.