தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் எந்த ராணுவ தாக்குதலும் நடக்கவில்லை! - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்

டெல்லி: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதாக வெளியான செய்தி தவறானது என இந்திய ராணுவ இயக்குநர் ஜெனரல் (டிஜிஎம்ஓ) லெப்டினன்ட் ஜெனரல் பரம்ஜித் சிங் தெரிவித்துள்ளார்.

pakistan
pakistan

By

Published : Nov 20, 2020, 6:15 AM IST

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் பயங்கரவாத நிலைகள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியிருப்பதாக பிடிஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டது. ஊடுருவல் அதிகமாக இருந்த நிலையில் இந்திய ராணுவம் பதிலடி கொடுத்ததாக தெரிவிக்கப்பட்டது.

இந்தத் தகவலுக்கு இந்திய ராணுவ இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் பரம்ஜித் சிங் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் துப்பாக்கிச் சூடு நடைபெறவில்லை என்று விளக்கமளித்துள்ளார்.

மேலும், கடந்த 13ஆம் தேதி அரங்கேறிய அத்துமீறலை பகுப்பாய்வு செய்து, பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளதாகவும் துப்பாக்கிச் சூடு எதுவும் நடைபெறவில்லை என்றும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details