தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாஜக வேட்பாளரை ஆதரித்து கிரேட் காளி பிரச்சாரம்

கொல்கத்தா: WWE மல்யுத்தப் போட்டியில் ஹெவி வெயிட் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியரான கிரேட் காளி, பாஜக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.

கிரேட் காளி பிரச்சாரம்

By

Published : Apr 27, 2019, 12:24 PM IST

மக்களவைத் தேர்தர் நடைபெறவுள்ள மாநிலங்களில் தீவிர பிரச்சாரம் நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில் WWE மல்யுத்தப் போட்டியில் ஹெவி வெயிட் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியரான கிரேட் காளி, கொல்கத்தாவின் ஜாத்வ்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் அனுபம் ஹஸ்ராவை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இது குறித்து கிரேட் காளி கூறும்போது, ’என்னை ஹஸ்ரா எங்கு அழைத்தாலும், எப்பொழுது அழைத்தாலும் வருவேன். அவர் எனது நண்பர். அவருக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது’ என்றார்.

மேலும் 7 அடி 1 அங்குல உயரமுள்ள இந்தப் புகழ்பெற்ற வீரர், ஹஸ்ராவை ஆதரித்து பிரச்சாரம் செய்தபோது இவரைக் காண பெருந்திரளான மக்கள் கூட்டம் கூடியது.

ABOUT THE AUTHOR

...view details