தமிழ்நாடு, கர்நாடகா, பீகார் உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று 17ஆவது மக்களவைக்கான இரண்டாம் கட்ட பொதுத்தேர்தல் நடைபெற்று வருகிறது. வாக்காளர்களும் தங்களது ஜனநாயக கடைமையை செய்து வருகின்றனர்.
திருமணம் ஆனாலும் கடமையை மறவாத புதுமண தம்பதி - மக்களவைத் தேர்தல்
இரண்டாம் கட்ட மக்களவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், திருமணம் ஆன புதுமண தம்பதியினர் தங்களது வாக்குகளைப் பதிவு செய்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
திருமணம் ஆனாலும் கடமையை மறவாத புதுமண தம்பதி
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் இன்று திருமணம் செய்துகொண்ட புதுமண தம்பதியினர், திருமணம் முடிந்த பின் தங்களது வாக்கினை உதாம்பூர் மக்களைத் தொகுதியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் பதிவு செய்தனர்.
திருமணம் நடந்தாலும், தேர்தல் நாளான இன்று தங்களது கடைமையை மறவாது வாக்களித்த இந்த தம்பதியினருக்கு இணையதளத்தில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.