பிகார் தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெற்றது. அதன் முடிவுகள் நவம்பர் 10ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. ஆளும் பாஜக-ஐக்கிய ஜனதா தள கூட்டணி 125 இடங்களில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. பாஜகவைவிட ஐக்கிய ஜனதா தளம் குறைவான இடங்களில் வெற்றிபெற்றிருந்த போதிலும், நிதிஷ்குமாரே முதலமைச்சராகத் தொடர்வார் என பாஜக தலைவர்கள் அறிவித்துள்ளனர்.
பிகார் அரசியல் களம்: 'நவம்பர் 15 மதியம் 12:30...!' - நாள் குறித்த தேஜகூ
பாட்னா: பிகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் வீட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்நிலையில், பிகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் வீட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சட்டப்பேரவைக் குழுத் தலைவராக நிதிஷ்குமார் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.
நவம்பர் 15ஆம் தேதி மதியம் 12:30 மணிக்கு, இக்கூட்டம் நடைபெறும் என நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார். இந்தக் கூட்டத்தில், இந்துஸ்தான் அவாம் மோர்ச்சா கட்சி, விஐபி கட்சிகளின் சட்டப்பேரவை உறுப்பினர்களும் கலந்துகொள்ள உள்ளனர்.