தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வரும் 22இல் பதவியேற்கும் புதிய மாநிலங்களவை உறுப்பினர்கள்! - பதவிபிரமாணம்

டெல்லி: புதிதாக தேர்தெடுக்கப்பட்டுள்ள மாநிலங்களவை உறுப்பினர்கள் வரும் 22ஆம் தேதியன்று பதவியேற்க உள்ளனர்.

Newly elected members of Rajya Sabha to take oath on July 22
Newly elected members of Rajya Sabha to take oath on July 22

By

Published : Jul 17, 2020, 7:03 PM IST

20 மாநிலங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 61 மாநிலங்களவை உறுப்பினர்கள் ஜூலை 22ஆம் தேதி அவைத் தலைவர் வெங்கையா நாயுடு அறையில் பதவியேற்கவுள்ளனர்.

பொதுவாக நாடாளுமன்றக் கூட்டுத்தொடர் நடைபெறும் போது அவையின் முன் பதவிப்பிரமாணம் செய்துவைப்பார். அப்படி அவையும் நடைபெறவில்லையென்றால் அவைத் தலைவரின் அறையில் பதவியேற்பு நிகழ்வு நடைபெறும்.

தற்போது கரோனா காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் நாடாளுமன்றக் கூட்டுத்தொடர் நடைபெறவில்லை. அதனால் புதிதாக தேர்தெடுக்கப்பட்டுள்ள மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவியேற்பு அவைத் மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு முன்னிலையில் பதவியேற்க உள்ளனர்.

பதவியேற்பின்போது, மாநிலங்களைவை உறுப்பினர்கள் தங்களுடன் ஒரு நபரை மட்டுமே அழைத்துவர அனுமதிக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து புதிதாக தேர்தெடுக்கப்பட்டுள்ள மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு அவைத் தலைவர் கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில், பதவியேற்பு விழாவில் பங்கேற்காத உறுப்பினர், பின்னர் நடைபெறும் கூட்டுத்தொடரில் பதவியேற்காமல் பங்கேற்க முடியாது என்றும் திருச்சி சிவா, கேசவ ராவ் போன்று மீண்டும் தேர்தெடுக்கப்பட்டுள்ள மாநிலங்களவை உறுப்பினர்களும் கட்டாயம் பதவியேற்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க...இந்தியனாக தலை நிமிருங்கள்: ஜியோ தருகிறது முற்றிலும் இந்திய தயாரிப்பு தகவல் சாதனங்கள்!

ABOUT THE AUTHOR

...view details