அதி தீவிர புயலான ஃபோனி, ஒடிசா மாநிலம் புரி அருகே நேற்று (மே 3) காலை கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 175 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. இதனால் மரங்கள், செல்போன் கோபுரங்கள், மின் கம்பங்கள் ஆகியவை சரிந்து விழுந்தன.
புயலில் பிறந்த குழந்தைக்கு 'ஃபோனி' பெயர் சூட்டி மகிழ்ந்த பெற்றோர்! - குழந்தை ஃபோனி
புவனேஷ்வர்: ஒடிஷாவில் புயல் கரையைக் கடந்தபோது பிறந்த குழந்தைக்கு ஃபோனி என பெற்றோர் பெயர் வைத்தனர்.
![புயலில் பிறந்த குழந்தைக்கு 'ஃபோனி' பெயர் சூட்டி மகிழ்ந்த பெற்றோர்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3185159-thumbnail-3x2-fani.jpg)
Newborn named after Cyclone 'Fani'
அப்போது ஒடிசா தலைநகர் புவனேஷ்வரில் உள்ள ரயில்வே மருத்துவமனையில் ஊழியருக்கு, பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அதற்கு அந்தக் குழந்தையின் பெற்றோர் 'ஃபோனி' என பெயர் சூட்டியுள்ளனர்.