தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனா லாக்டவுனை விலக்க இரு புதிய யுக்திகள் கைகொடுக்குமா? - travel bubble scheme

கரோனா பரவலைத் தடுக்க லாக்டவுன் அமலில் உள்ள நிலையில், அதன் தளர்வை இரு புதிய யுக்திகள் மூலம் மேற்கொள்ள சர்வதேச நாடுகள் திட்டமிட்டுவருகின்றன.

New Zealand
New Zealand

By

Published : May 20, 2020, 12:20 PM IST

கரோனா லாக்டவுன் மக்களை வெகுவாக சோர்வடையச் செய்துள்ளன. இந்த லாக்டவுனை படிப்படியாகக் குறைத்து பொருளாதார நடவடிக்கையை எவ்வாறு மீட்டெடுக்காலம் என்ற திட்டத்தை பல்வேறு நாடுகள் தொடர்ச்சியாக மேற்கொண்டுவருகின்றன. லாக்டவுனை விலக்கினால் நோய்த் தொற்று வேகமாகப் பரவும் அபாயம் உள்ளதால், கவனத்துடன் இதை கையாள வேண்டிய அவசியம் உள்ளது. இந்நிலையில், நியூசிலாந்து அரசு சோசியல் பப்புல், ட்ராவல் பப்புல் என்ற இரு யுக்திகளில் இதை கையாள திட்டமிட்டுள்ளது.

சோசியல் பப்புல் திட்டம் என்ன?

மக்கள் நேரடியாக சந்திக்கும் வழக்கத்தை கட்டுப்படுத்தவே இந்த திட்டத்தை நியூசிலாந்து மேற்கொள்கிறது. மக்கள் அதிகளவில் புழங்குவதை தவிர்க்க குறிப்பிட்ட உறவினர் மற்றும் நண்பர்களை மட்டுமே சந்திக்க இந்த சோசியல் பப்புல் திட்டம் அனுமதிக்கிறது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆய்வின்படி குறுகிய வட்டத்திலேயே மக்கள் சந்திப்பு மேற்கொள்வது வைரஸ் பாரவலைத் தடுக்கும். அத்துடன் யாருக்கேனும் வைரஸ் பாதிப்பு கண்டறியப்படும்போது அவர்களுடன் தொடர்பில் இருப்பவர்களை எளிதில் கண்டறிய இது உதவும்.

எங்கெல்லாம் இந்தத் திட்டம் அமலில் உள்ளது?

சில நாடுகள் லாக்டவுன் தளர்வுகளை அமல்படுத்தும் விதமாக இந்த திட்டத்தை முன்னெடுத்துள்ளது. நியூசிலாந்து, பெல்ஜியம், ஜெர்மனி ஆகிய நாடுகள் ஏற்கனவே அமல்படுத்தியுள்ள நிலையில், பிரான்ஸ், ஆஸ்திரியா மற்றும் டென்மார்க் போன்ற நாடுகள், ஒருவர் 10 நபர்களை மட்டுமே சந்திக்க அனுமதியளித்துள்ளது. ஜெர்மனியில் இரண்டு குடும்பங்கள் மட்டுமே பரஸ்பரம் சந்தித்துக்கொள்ளலாம்.

இந்நிலையில், நியூசிலாந்து பப்புல் என்ற பெயரில் இந்தத் திட்டத்தை முன்னெடுக்கிறது. இதன் மூலம் தங்களுக்கு விருப்பமான உறவினர்களை தேர்வு செய்து, அவர்களுடன் மட்டும் சந்திப்பில் ஈடுபட நியூசிலாந்து அரசு அனுமதிக்கிறது. தேர்வு செய்யப்படும் நபர்கள் நோய்த் தொற்றுக்கு ஆளானவர்களா என்பதை உறுதிசெய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெல்ஜியமும் இந்தத் திட்டத்தை அமல்படுத்த தொடங்கியுள்ளது. பிரிட்டனிலும் இந்தத் திட்டத்தை செயல்படுத்த முயற்சிகள் நடைபெறுகின்றன.

பயணத்திற்கும் இந்த விதி பொருந்துமா?

ஆம், இந்த சோசியல் பப்புல் திட்டத்தை போலவே, ட்ராவல் பப்புல் என்பதன் மூலம் பயணத் திட்டத்தை வகுக்கும் செயல்பாடு நடைபெறுகிறது. நாடு முடக்கத்தின் காரணமாக பொருளாதாரம் பெரும் பாதிப்பைச் சந்தித்துவருவதால், நாடுகளை மீண்டும் திறக்கும் திட்டத்தை மேற்கொள்ள விளைகிறது. இந்நிலையில், பாதிப்பு குறைவான நாடுகளுக்கு இடையே பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்து வர்த்தகத்தையும் சுற்றுலாவையும் உயிர்பிக்க இந்த டிராவல் பப்புல் திட்டத்தை பயன்படுத்த ஆலோசனை நடைபெறுகிறது. சர்வதேச போக்குவரத்தை மீட்டெடுக்க இந்தத் திட்டம் நிச்சயம் பயன்படும்.

தற்போது நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் கரோனா தடுப்பை வெற்றிகரமாக மேற்கொண்டுவருகின்றன. எனவே, கரோனா தொற்று குறைவாக உள்ள இந்த இரு நாடுகளிலும் ட்ரவல் பப்புல் திட்டத்தில் போக்குவரத்தை தொடங்க பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. இந்த திட்டம் செயல்பட்டால் தாய்வான், ஹாங்காங், பின்லாந்து ஆகிய நாடுகளும் செயல்படுத்தலாம்.

மேலும் பால்டிக் பகுதி நாடுகள் என அழைக்கப்படும் எஸ்தோனியா, லடேவியா, லித்துவானியா ஆகிய நாடுகளும் இந்தத் திட்டத்தை அமல்படுத்துகின்றன.

இதையும் படிங்க:ஊக்குவிப்பு முதல் வேலைவாய்ப்பு வரை

ABOUT THE AUTHOR

...view details