கரோனா நோய்த்தொற்று வராமல் இருக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில் அத்தியாவசியப் பொருட்களான காய்கறி, இறைச்சி, மளிகைப் பொருட்கள் வாங்க குபேர் மார்க்கெட் என்கின்ற பெரிய மார்க்கெட் பகுதியில் முன்னெச்சரிக்கை இல்லாமல் மக்கள் அதிகம் கூடுவதால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.
இதனைக் கருத்தில் கொண்டு புதுச்சேரி அரசு தற்காலிகமாக புதிய பேருந்து நிலையம் அருகில் காய்கறி மட்டும் விற்பனை செய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனை முதல்வர் நாராயணசாமி தலைமையில் பொதுப்பணித் துறை அமைச்சர் நமச்சிவாயம், சட்டமன்ற உறுப்பினர் சிவா, மாவட்ட ஆட்சியர் அருண் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
விற்பனை செய்யும் இடத்தில் ஒரு மீட்டர் அளவில் பொதுமக்கள் நின்று காய்கறி வாங்குவதற்கான ஏற்பாடுகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் நமச்சிவாயம் கூறியதாவது:-