தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'தேர்வு பற்றி மத்திய அரசின் முடிவு பேரழிவை உருவாக்கும்': பஞ்சாப் எம்.பி., பிரதாப் சிங் - கல்லூரிகள் தேர்வுகள்

டெல்லி: கல்லூரிகளுக்கான இறுதியாண்டு தேர்வு பற்றிப் புதிய வழிகாட்டுதல்களை மீண்டும் மறுபரிசீலனை செய்யவேண்டும் என பஞ்சாப் மாநிலங்களவை உறுப்பினர் பிரதாப் சிங் மத்திய அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.

new-ugc-guidelines-recipe-for-disaster-says-punjab-mp-requests-hrd-ministry-to-reconsider
new-ugc-guidelines-recipe-for-disaster-says-punjab-mp-requests-hrd-ministry-to-reconsider

By

Published : Jul 9, 2020, 1:50 PM IST

இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் பள்ளி, கல்லூரிகளைத் திறக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. ஏற்கெனவே பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மனித வள மேம்பாட்டு அமைச்சகம் கல்லூரி இறுதியாண்டுத் தேர்வுகளை நடத்த புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

இது மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பஞ்சாப் மாநிலங்களவை உறுப்பினர் பிரதாப் சிங், 'மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் இந்த முடிவு, இந்தியாவில் புதிய பேரழிவுக்கு வழிவகுக்கும்' என்றார்.

இதனைத் தொடர்ந்து பிரதாப் சிங், மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனக் கடிதம் அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில், ''மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வுகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது, சரியான முடிவு அல்ல. மாணவர்களின் தற்போதைய திறனுக்குத் தேர்வுகள் நடத்துவதும் சரியாக இருக்காது. இந்த முடிவினை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

இந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட பல்கலைக்கழக மானியக் குழுவின் இந்த பரிந்துரையையும், வழிகாட்டுதல்களையும் என்னால் நம்ப முடியவில்லை. ஏற்கெனவே பஞ்சாப், மகாராஷ்டிரா உள்ளிட்ட 7 மாநிலங்களில் மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அனைத்துத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதனால் மத்திய அரசின் இந்த முடிவு மாணவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும். மாணவர்களின் திறனை அளவிட தேர்வுகள் மட்டுமே கருவி இல்லை. இதனால் நமது நாட்டின் கல்வி முறைகள், இந்த நேரத்தில் சூழலுக்கு தகுந்தாற் போல் இருக்க வேண்டும்'' என எழுதியுள்ளார்.

இதையும் படிங்க:யோகி ஆதித்யநாத்தை கண்டித்து போராட்டம் - இளைஞர் காங்கிரஸார் கைது

ABOUT THE AUTHOR

...view details