ஒடிசா மாநிலம் புவனேஸ்வர், ஆச்சார்யா பிகார் பகுதியில் அம்மாநில காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக ஆட்டோ ஓட்டி வந்த ஹரிபந்து கன்கர் என்பவர் மது போதையில் இருந்துள்ளார்.
ஆட்டோ ஓட்டுநருக்கு 47,500 ரூபாய் அபராதம் விதித்த ஆர்டிஓ! - bhubaneswar auto driver fined 47,500
புவனேஸ்வர்: சாலை விதிகளை மதிக்கத் தவறியதாக ஆட்டோ ஓட்டுநருக்கு 47 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதித்த வட்டார போக்குவரத்து அலுவலரால் அப்பகுதியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, அவரிடம் மேற்கொண்ட சோதனையின்போது ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட எந்த ஆவணங்களும் இல்லாமல் இருப்பது தெரியவந்துள்ளது. பின்னர், இந்த விவகாரம் ஆர்டிஓ அலுவலரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், கன்கருக்கு ஆர்.சி புத்தகத்திற்கு ஐந்தாயிரம், ஓட்டுநர் உரிமத்திற்கு ஐந்தாயிரம், மது அருந்திவிட்டு வாகனம் இயக்கியதற்காக பத்தாயிரம், மாசு கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறியதாக பத்தாயிரம் ரூபாய் உள்ளிட்ட அபராதத் தொகைகளை ஆர்டிஓ விதித்துள்ளார்.
மேலும், இந்த வாகனத்திற்கான உரிய ஆவணங்களை அதன் உரிமையாளர் கந்தூரி கத்துவா சமர்ப்பித்தால், அபராதத் தொகைகள் குறைக்கப்படும் எனவும் போக்குவரத்து அலுவலர் கூறியுள்ளார். இதனால் அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
TAGGED:
New motor vehicle act