தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சீனாவில் உருவான புதிய வைரஸ்! - பன்றிக் காய்ச்சல்

பெய்ஜிங்: தொற்றுநோயை உண்டாக்க கூடிய புதிய வகை பன்றிக் காய்ச்சல் சீனாவில் உருவாகியுள்ளது தெரியவந்துள்ளது.

சீனாவில்  உருவாகியுள்ள புதிய வைரஸ்
சீனாவில் உருவாகியுள்ள புதிய வைரஸ்

By

Published : Jul 2, 2020, 12:37 PM IST

சீனாவில் புதிய வகை வைரஸ் உருவாகியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். G4 என பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸ், 2009 ஆம் ஆண்டு கொடிய தொற்றுநோயை ஏற்படுத்திய பன்றிக் காய்ச்சல் எச்1என்1 (1H1N1) என்ற மரபணு வம்சாவளியைச் சேர்ந்தது.

இது குறித்த தகவல்கள் அமெரிக்காவின் பிரபல ஆய்வு இதழில் வெளியாகியுள்ளது.

இது குறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் கூறுகையில், “ஆய்வில் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை பிரதிநிதியாக இருக்க போதுமானதாக இல்லை. சம்பந்தப்பட்ட துறைகள் மற்றும் வல்லுநர்கள் இதுகுறித்து திடமான எச்சரிக்கையோடு நிலைமையைக் கையாண்டு தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்" என்றார்.

இதையும் படிங்க: சீன செயலிகள் தடை... அமெரிக்கா வரவேற்பு!

ABOUT THE AUTHOR

...view details