ஒரு நபர் அனுபவிக்கும் உடல் மற்றும் மன அழுத்தத்தைக் கண்டறிய ஸ்மார்ட் ஃபோன்கள் பயன்படுத்தப்படலாம். இத்தாலியின் பாலிடெக்னிகோ டி மிலானோவைச் சேர்ந்த பேராசிரியர் என்ரிகோ கியானி தலைமையிலான குழுவினர் இதுதொடர்பாக ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வில், ஸ்மார்ட் ஃபோனை ஒருவரின் ஆரோக்கியத்தை எளிமையாகக் கண்காணிப்பதற்கு உடனடியாகக் கிடைக்கக்கூடிய ஒரு கருவியாக பயன்படுத்தலாம் என்பது தெரியவந்துள்ளது.
அந்த வகையில், இதய துடிப்பு விகிதம் மற்றும் மன அழுத்த நிலை போன்ற முக்கிய அளவுகளை துல்லியமாக கண்டறிய ஸ்மார்ட் ஃபோன்களை பயன்படுத்தலாம். ஸ்மார்ட் ஃபோனுக்குள் இருக்கும் கருவிகள் இதய செயல்பாட்டுடன் கூடிய சமிக்ஞையை பெற பயன்படுகிறது. இது ஒவ்வொரு துடிப்பிலும் இதயத்தின் அதிர்வுகளால் கண்காணிக்கப்படுகிறது. ஆக, தொலைபேசியை உடலின் குறிப்பிட்ட பாகங்களில் வைப்பதன் மூலம் இதனை உணர முடியும்.