வாஷிங்டன் மருத்துவக் கல்லூரியின் மருத்துவ தர மதிப்பீடு மையம் நடத்திய ஆய்விலேயே இந்தத் தகவலானது வெளியாகியுள்ளது.
இந்த ஆய்வின்படி, சஹாரா பாலைவனத்துக்குட்பட ஆப்ரிக்க நாடுகளில் உள்ள 50 விழுக்காடு மக்களுக்கு சோப்பு, சுத்தமான தண்ணீர் ஆகிய அடிப்படை சுகாதார வசதிகள் இல்லை எனக் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இவர்கள் கோவிட்-19 தொற்றுக்கு ஆளாகும் வாய்ப்பு அதிகம் உள்ளதென இந்த ஆய்வு அச்சம் தெரிவிக்கிறது.
மேலும், உலகின் 46 நாடுகளில் உள்ள பெரும்பாலான மக்களுக்கு சோப்பு, தண்ணீர் வசதி இல்லையெனக் கூறும் இந்த அறிக்கை, நைஜீரியா, சீனா, எத்தியோப்பியா, காங்கோ, வங்க தேசம், பாகிஸ்தான், இந்தியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் ஐந்து கோடிக்கும் அதிகமானோருக்குக் கை கழுவும் வசதி இல்லையென வேதனைத் தெரிவித்துள்ளது.