பிரதமர் மோடி, குடியரசு தலைவர், துணை குடியரசுத் தலைவர் உள்ளிட்ட முக்கிய நபர்கள் பயணிப்பதற்காக மத்திய அரசு அமெரிக்காவில் முன்னணி விமான தயாரிப்பு நிறுவனமான போயிங்கிடம் ஆர்டர் கொடுத்துள்ளது. திட்டமிட்டப்படி வரும் ஜூலை மாதம் இந்தியாவிற்கு வரவிருந்த போயிங் விமானங்கள், கரோனா தொற்றால் செப்டம்பர் மாதத்தில் வரும் என கூறப்படுகிறது.
அதீநவீன பாதுகாப்பு அம்சங்கள்... பிரதமர் மோடிக்காக வரவிருக்கும் போயிங் விமானம்!
டெல்லி: பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோரின் பயன்பாட்டிற்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட இரண்டு பி777 விமானங்கள் இந்தியாவுக்கு விரைவில் வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
modi
இந்த விமானங்கள் அதிநவீன ராணுவ பாதுகாப்பு அமைப்புகளுடன் மறு சீரமைக்கப்பட்டுள்ளதால் வான்வழி தாக்குதல்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும். மேலும், லார்ஜ் ஏர்கிராப்ட் இன்ப்ராரெட் கவுன்டர்மெசர்ஸ் புரோடெக்ஷன் சூட்ஸ் ஆகியவை பிரத்யேகமாக அமெரிக்காவிடமிருந்து வாங்கி பொருத்தியுள்ளனர்.
இதுவரை உயர் பதவியில் இருப்போர் வெளிநாடு செல்வதற்கு ஏர் இந்தியாவின் பி747 ஏர் இந்திய ஒன் வகை விமானங்களை பயன்படுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.