தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதிய வகை வெட்டுக்கிளி இனத்திற்கு கேரள ஆராய்ச்சியாளரின் பெயர்! - தனீஷ் பாஸ்கர்

புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட வெட்டுக்கிளி இனத்திற்கு இந்தியாவில் பாதுகாப்பு ஆராய்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பாற்றிய கேரள ஆராய்ச்சியாளரின் பெயரிடப்பட்டது.

தனீஷ் பாஸ்கர்
தனீஷ் பாஸ்கர்

By

Published : Aug 10, 2020, 7:34 PM IST

வயநாடு (கேரளா):116 ஆண்டுகளுக்குப் பிறகு ‘பிக்மி டிவிக்’ என்ற பெயரிடப்பட்ட இந்த புதிய வெட்டுக்கிளி இனம் சமீபத்தில் இலங்கையிலுள்ள சிங்கராஜா மழைக்காடுகளில் ஜெர்மனி, குரோஷியா ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.

அதையடுத்து, இந்த வெட்டுக்கிளிக்கு கேரள வன ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த ஒரு உயிரியல் மற்றும் வெட்டுக் கிளி வல்லுநரான தனீஷ் பாஸ்கர்(28) என்பவரின் நினைவாக கிளாடோனோட்டஸ் பாஸ்கிரி என்று பெயரிடப்பட்டுள்ளது.

இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் (ஐ.யூ.சி.என்) ‘ஸ்பீசிஷ் சர்வைவல் கமிஷன்’ என்று அழைக்கப்படும் வெட்டுக்கிளி நிபுணர் குழுவில் தனீஷ் உறுப்பினராக உள்ளார். கேரள வன ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராகவும் உள்ளார்.

10 கோடி முதலீடுகளை ஈர்த்த டிக்டாக் மாற்று செயலி சிங்காரி!

வெட்டுக்கிளிகள் உள்பட வாழ்விடத்தில் உள்ள பல பூச்சி இனங்கள் குறித்து எராவிக்குளம் தேசிய பூங்காவில் தனீஷின் சமீபத்திய ஆய்வுகள் சர்வதேச கவனத்தை ஈர்த்தன.

ABOUT THE AUTHOR

...view details