தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'புதிய கல்விக் கொள்கை கேஃப்டேரியா அணுகுமுறையாக உள்ளது' - டாக்டர் எம்.கே.ஸ்ரீதர்! - NEP2020Draft

பெங்களூரு : 34 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டுவந்த கல்விக் கொள்கையை மாற்றி அமைக்கும் பல்வேறு சீர்திருத்தங்களை உள்ளடக்கிய "புதிய கல்விக் கொள்கை 2020"ஐ மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

புதிய கல்வி கொள்கை கஃபடேரியா அணுகுமுறையைக் கைக்கொள்கிறது  - டாக்டர் எம்.கே.ஸ்ரீதர்!
புதிய கல்வி கொள்கை கஃபடேரியா அணுகுமுறையைக் கைக்கொள்கிறது - டாக்டர் எம்.கே.ஸ்ரீதர்!

By

Published : Jul 31, 2020, 6:29 AM IST

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவர் டாக்டர் கே. கஸ்தூரி ரங்கன் தலைமையிலான வல்லுநர்கள் குழுவால் தயாரிக்கப்பட்ட புதிய கல்விக் கொள்கையின் வரைவு உயர்கல்வியை சீர்திருத்தமும் மாணவர்களுக்கு சரியான திறனை வளர்த்து எடுக்கவும், கல்விச் சாலைகளுக்கும் தொழிற்சாலைகளுக்கும் இருக்கின்ற இடைவெளியை குறைக்கும் நோக்கத்தையும் கொண்டிருப்பதாக அதன் ஆதரவாளர்களால் கொண்டாடப்படுகிறது.

புதிய கல்விக் கொள்கையானது உயர்கல்விக்கு ஒரே மேலாண்மை நிறுவனத்தை உருவாக்க முனைகிறது. அதன்வழி கல்வி நிர்வாகம் மற்றும் நிதி ரீதியான தன்னாட்சியை கல்வி நிறுவனங்களுக்கு வழங்க முடியும் என நம்புகிறது. இது தொடர்பாக அந்த வல்லுநர் குழுவின் அங்கத்தினரான டாக்டர் எம்.கே.ஸ்ரீதர் நமது 'ஈடிவி பாரத்'துடன் பேசிய போது, "தொழிற்சாலைகளின் தேவைகளை இலகுவாக நிவர்த்தி செய்யும்படியாக கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

நம்முடைய தொழிற்சாலைகள் தொடர்ந்து மாற்றமடைந்து வருகின்றன. மாற்றம் நிரந்தரமானது. ஆனால் நம் கல்வி முறையால் அதற்கு ஈடுகொடுக்க முடியவில்லை. ஆனால், தற்போதைய தன்னாட்சியுடன் கூடிய கல்வி நிறுவனங்கள் தொழிற்சாலைகளின் போக்குகளை விரைவாக எட்டிப்பிடிக்க முடியும்" என்றார்.

இது குறித்து மேலதிகமாக விளக்கியவர், "கல்விச்சாலைகள் ஒன்றாக இணைந்து ஒரு குறிப்பிட்ட தொழிற்சாலையில் தேவைக்கு ஏற்ப பாடங்களை வகுத்துக்கொள்ள முடியும். இந்த மாற்றங்கள் மாணவர்களுக்கும் தொழிற்சாலைகளுக்கு மட்டுமல்ல கல்வி நிறுவனங்களுக்கும் வாய்ப்புகளை திறந்து விட்டிருக்கிறது. தன்னாட்சியாக உருவெடுத்த பின்னர் கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் சமூகங்கள் மற்றும் மாணவர்களிடமிருந்து ஆதரவைப் பெற்று தங்கள் நிதி நிலைமையை சரி செய்து கொள்ள முடியும்" என்றார்.

கேஃப்டேரியா அணுகுமுறை

புதிய கல்விக் கொள்கையானது மாணவர்கள் தங்களுடைய விருப்பமான பாடங்களை படித்து கொள்ளும்படி வாய்ப்புகளை வழங்குகிறது. "கலைக்கும் அறிவியலுக்கும் என திட்டவட்டமான எந்தப் பிரிவினையும் இருக்காது" என்று அரசாங்கம் தங்களுடைய வரைவில் குறிப்பிட்டிருக்கிறது. இந்த அணுகுமுறை காலத்தின் தேவை கருதி உருவாக்கப்பட்டிருக்கிறது.

புதிய கல்வி அமைப்பானது மாணவர்களின் முதல் வேலையை மட்டுமல்ல அடுத்தடுத்து அவர்கள் பார்க்கப் போகிற வேலையை குறித்தும் அக்கறை கொண்டிருக்கிறது. கேஃப்டேரியா அணுகுமுறை என்பது வெவ்வேறு பாடங்களை தேர்வு செய்து படிக்க வாய்ப்பு தருவதை குறிக்கிறது.

புதிய கல்விக் கொள்கையின் கீழ் அரசாங்கமானது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் ஆறு விழுக்காட்டை மாநிலங்களின் உதவியோடு கல்விக்கு ஒதுக்குவது என்ற திட்டத்தை மத்திய அரசு முன்வைத்திருக்கிறது.

ABOUT THE AUTHOR

...view details