தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'தெற்கு அந்தமானில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி...!' - வானிலை ஆய்வு மையம் - imd

டெல்லி: தெற்கு அந்தமான், அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நாளை (டிச. 04) புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

new-depression-forms-south-andaman-imd
new-depression-forms-south-andaman-imd

By

Published : Dec 3, 2020, 9:56 AM IST

வங்காள விரிகுடாவில் உருவான புரெவி புயல், தமிழ்நாட்டின் பாம்பனுக்கு 90 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது. மணிக்கு 12 கி.மீ. வேகத்தில் நகர்ந்துகொண்டிருக்கும் இப்புயல் கன்னியாகுமரிக்கும் பாம்பனுக்கு இடையே கரையைக் கடக்கக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் தெற்கு அந்தமான், அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளது எனக் கூறியுள்ளது.

மேலும் அதன் பாதை, வலு உள்ளிட்டவை குறித்து வரும் நாள்களில் அறிவிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: வடகிழக்கு மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

ABOUT THE AUTHOR

...view details