ஆந்திரப் பிரதேச மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள எடாபகா மண்டல் பகுதியில் பிறந்த குழந்தையை, பெற்றத் தாயே களிமண்ணில் புதைத்துவிட்டு தப்பி ஓடியுள்ளார். சில மணி நேரங்களில் குழந்தை கண் விழித்து அழுதுள்ளது. அந்த அழுகை சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் குழந்தையைத் தேடியுள்ளனர்.
பின்னர் களிமண்ணில் புதைத்திருந்த குழந்தையை மீட்டவர்கள், உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்ட பின், அந்தக் குழந்தை பத்ராச்சலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.