கரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் விமான சேவைகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், சூரத்தில் இதய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தையை, அம்மாநில மருத்துவர் குழு ஒன்று சிகிச்சைக்காக கர்நாடக மாநிலம் பெல்காம் விமான நிலையத்திற்கு கொண்டு வந்துள்ளது.
இதய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை: தனி விமானம் மூலம் கர்நாடகா அழைத்து வருகை - பெல்காம் விமான நிலையம்
பெங்களூரு: இதய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தையினை சிகிச்சைக்காக தனி விமானம் மூலம் சூரத்திலிருந்து பெல்காம் கொண்டு வந்துள்ளனர்.
new-born-baby-arrived-at-belagavi-from-surat
அங்கிருந்து அந்த குழந்தை பெங்களூருவில் உள்ள கே.எல்.இ மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுசெல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. குழந்தையைக் காப்பாற்ற மருத்துவக் குழுவினரின் இந்த முயற்சி, பல்வேறு தரப்பு மக்கள் மத்தியில் பாராட்டப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க:மூன்று வயது குழந்தை மூக்கில் கொலுசு முத்து - லாவகமாக எடுத்த மருத்துவர்!
Last Updated : Apr 15, 2020, 8:30 PM IST