நாட்டின் உள்துறை அமைச்சரான அமித் ஷா பாஜகவின் தலைவர் பொறுப்பில் தொடர்ந்து வந்தநிலையில், 'ஒரு நபர், ஒரு பதவி' என்ற எழுதப்படாத விதியை பாஜக கட்சி பின்பற்றி வருவதால், அமித் ஷா பாஜகவின் தலைவர் பதவியிலிருந்து விலகினார். பின், புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை பாஜகவின் செயல் தலைவராக உள்ள ஜே.பி.நட்டாவை, பாஜக தலைமைக்குழு நியமித்தது.
இந்நிலையில் பாஜகவின் புதிய தேசிய தலைவர் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா அளித்த விளக்கத்தில், 'பாஜக கட்சித் தலைமை இடத்தில் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆகையால் கூடிய விரைவில், வரும் டிசம்பர் மாதத்திற்குள் பாஜகவின் புதிய தேசிய தலைவர் அறிவிக்கப்படுவார்' என்றார்.