புதிதாக நிறைவேற்றப்பட்ட வேளாண் திருத்த சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில், அச்சட்டத்தினால் விவசாயிகள் பாதுகாப்பற்று உணர்கிறார்கள் என ராஜஸ்தான் மாநிலத்தின் முன்னாள் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்த அவர் இதுகுறித்து கூறுகையில், "மாநில மக்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்ற காங்கிரஸ் கட்சியும் ராஜஸ்தான் அரசும் கடினமாக உழைத்துவருகிறது.
இந்த விவகாரத்தில் மத்திய அரசு பிடிவாதத்தை விட்டுவிட்டு வேளாண் சட்டங்களை உடனடியாக நீக்க வேண்டும்.
எதிர்காலத்தை கருதி விவசாயிகள் பாதுகாப்பற்று உணர்கிறார்கள்" என்றார். மேலும், காங்கிரஸில் மாநிலத் தலைவர் உள்ளிட்ட கட்சிப் பதவிகள், அடுத்த மாதம் நிரப்பப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.