கர்நாடகா சட்டப்பேரவையில் காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தளம், நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்ததால், முதலமைச்சர் பதவியை குமாரசாமி ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து முன்னாள் பிரதமர் தேவ கவுடா இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
'பாஜக போன்ற கட்சியை பார்த்ததில்லை' - தேவகவுடா வேதனை - காங்கிரஸ்
பெங்களூரு: என் வாழ்நாளில் பாஜக போன்ற ஒரு கட்சியை பார்த்ததில்லை என முன்னாள் பிரதமர் தேவ கவுடா வேதனை தெரிவித்துள்ளார்.
!['பாஜக போன்ற கட்சியை பார்த்ததில்லை' - தேவகவுடா வேதனை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3930062-thumbnail-3x2-bjp.jpg)
தேவ கவுடா
அப்போது அவர் கூறுகையில், " கடைசி கூட்டணி அரசு அமைத்ததில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. முன்னாள் முதலமைச்சர், மற்ற மூத்த அமைச்சர்களை குறை கூற விரும்பவில்லை. கர்நாடகாவில் நடந்ததுபோல் என் வாழ்நாளில் எப்போதும் பார்த்ததில்லை. குதிரை பேரம் செய்த பாஜக போல், என் வாழ்நாளில் எந்த கட்சியும் செய்ததில்லை" என்றார்.