நேபாளத்தில் புதிதாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு திருத்த மசோதா தொடர்பான திருத்தங்களை பரிந்துரைக்க அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மூன்று நாள்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. கலபானி, லிபுலேக் மற்றும் லிம்பியாதுரா ஆகிய இந்திய பகுதிகளை உள்ளடக்கிய புதிய நேபாள நாட்டின் வரைபடத்திற்கு ஒப்புதல் அளிக்கும் வகையில் இந்த சட்டத்திருத்தம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
நேபாள நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் சிவமயா தும்பஹாங்பே நாட்டின் வரைபடத்தை புதுப்பிக்க வழி செய்யும் வகையில் அரசியலமைப்பு திருத்த மசோதாவை மே 30ஆம் தேதி தாக்கல் செய்தார்.