இந்திய - நேபாள எல்லைப் பகுதிகளை, நேபாள ராணுவத் தலைவர் பூரான் சந்திர தாபா நேற்று ( ஜூன் 17) ஆய்வுசெய்தார். எல்லைப் பிரச்னை ஏற்பட்ட பின்னர், இந்திய - நேபாள எல்லைப்பகுதியான சாங்ரு பகுதியை நேபாள ராணுவத் தலைவர் பூரான் சந்திர தாபாவும்; அந்நாட்டின் ஆயுதப்படைத் தலைவர் ஷைலேந்திர ஸ்வனால் ஆகியோரும் இணைந்து ஆய்வு செய்வது இதுவே முதல் முறையாகும்.
இந்திய - நேபாள எல்லையை ஆய்வுசெய்த நேபாள ராணுவத் தலைவர்! - இந்திய ராணுவத் தலைவர்
இந்திய நேபாள எல்லைப் பகுதிகளை, நேபாள ராணுவத் தலைவர் ஆய்வுசெய்தார்.
![இந்திய - நேபாள எல்லையை ஆய்வுசெய்த நேபாள ராணுவத் தலைவர்! இந்திய எல்லையை ஆய்வுசெய்த ராணுவத் தலைவர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-05:55:12:1592483112-7669041-945-7669041-1592477127456.jpg)
இது குறித்து இந்தியாவின் சீமா சுரக்ஷா பால் (Seema Suraksha Bal (SSB)) 11 பட்டாலியன் கமாண்டென்ட் மகேந்திர பிரதாப் கூறியதாவது, "இந்தியப் பிரதேசமான லிபுலேக், கலாபானி மற்றும் லிம்பியாதுராவை அதன் வரைபடத்தில் சேர்த்ததிலிருந்து நேபாளம் பாதுகாப்பை அடைந்துள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அவர்களின் வருகைக்குப் பிறகு, இந்திய பாதுகாப்பு நிறுவனம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கூறப்பட்டுள்ளது. இதற்கிடையில், சீமா சுரக்ஷா பால் (எஸ்.எஸ்.பி) படையினர் எல்லைப் பகுதிகளில் ரோந்துப் பணிகளையும் தீவிரப்படுத்தியுள்ளது. இந்தியா மற்றும் நேபாள எல்லையில் தற்போது அமைதி நிலவுகிறது" என்றார்.