இந்தியாவுக்கும் நேபாளத்திற்கும் இடையே எல்லை மோதல் கடந்த சில மாதங்களாகவே நீடித்துவருகிறது. இந்தியாவுக்கு சொந்தமான இடத்தை நேபாள அரசு வரைபடத்தில் இணைக்கும் அவசர சட்டத்திற்கு அந்நாட்டு நாடாளுமன்றம் அனுமதி அளித்தது. இது பதற்றத்தை மேலும் அதிகரித்தது.
இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் பிலிபிட் மாவட்டம் அருகேவுள்ள ஆள் அரவமற்ற இந்தியா - நேபாள எல்லைப் பகுதியில் சாலை அமைக்கும் பணிகளில் நேபாளம் ஈடுபட்டது. இது குறித்த தகவல் கிடைத்ததையடுத்து பிலிபிட் மாவட்ட ஆட்சியர் வைபவ் ஸ்ரீவாஸ்தவா சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து சென்றார்.
அப்போது செய்தியாளர்களிம் பேசிய மாவட்ட ஆட்சியர் வைபவ் ஸ்ரீவாஸ்தவா, "எல்லையில் இருக்கும் ஆள் ஆரவமற்ற பகுதியில் நேபாளம் சில கட்டுமானங்களை மேற்கொள்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இங்கு வந்தோம்.