தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அரசியல் நெருக்கடியில் நேபாள பிரதமர் - பின்னணியில் இந்தியா? - Sharma Oli under pressure to resign

அரசியல் நெருக்கடிக்குள்ளாகியுள்ள நேபாள பிரதமர் ஒலி, தனது அரசை கவிழ்க்க இந்தியா சதி செய்துவருவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

Nepal at the crossroads
Nepal at the crossroads

By

Published : Jul 4, 2020, 10:23 AM IST

கே.பி சர்மா ஒலி நேபாள நாட்டின் பிரதமராக உள்ளார். இவர் இந்தியப் பகுதிகளை உள்ளடக்கிய திருத்தப்பட்ட புதிய வரைப்படத்தை வெளியிட்டார்.

மேலும், இந்தியாவை விமர்சிக்கும் வகையில் கருத்துகளை வெளியிட்டுவருகிறார். சமீபத்தில் மாநாடு ஒன்றில் பேசிய அவர், இந்தியப் பகுதிகளை உள்ளடக்கிய நாட்டின் புதிய வரைப்படத்தை வெளியிட்ட காரணத்தினால் இந்தியா தனது ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்வதாக குற்றச்சாட்டினார்.

இதற்கு இந்தியா தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதனால் அங்கு ஆளும் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியில் அதிருப்தி ஏற்பட்டு சொந்த கட்சிக்குள் பிரதமர் ஒலிக்கு எதிராக குரல் எழுந்தது.

இதனிடையே, ஒலிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. பின்னர் ஜுலை 1 ஆம் தேதி அவர் வீடு திரும்பிவிட்டதாகவும் கூறப்பட்டது.

கம்யூனிஸ்ட் கட்சியின் 44 நிலைக்குழு உறுப்பினர்களில் 31 பேர் சர்மா ஒலிக்கு எதிராக இருக்கின்றனர். பிரதமர் பதவியிலிருந்து அவர் விலக வேண்டும் என போர்கொடி தூக்கியுள்ளனர். இதற்கிடையே தனது அரசை கவிழ்க்க ஆளும் கட்சியின் மூத்தத் தலைவர்கள் டெல்லிக்கு சென்று இந்தியத் தலைவர்களை சந்தித்துவருவதாக ஒலி மீண்டும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இதையும் படிங்க: 'மறமானம் மாண்ட...' - திருக்குறளை மேற்கோள்காட்டிய மோடி

ABOUT THE AUTHOR

...view details