தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதிய கல்விக்கொள்கையை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் - மேற்கு வங்க அரசு - என்.இ.பி

கொல்கத்தா : மாநில உரிமையை பறிக்கும் தேசிய கல்விக் கொள்கையை (என்இபி2020) அமல்படுத்த ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என மேற்கு வங்க கல்வி அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி தெரிவித்துள்ளார்.

புதிய கல்விக்கொள்கையை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் - மேற்கு வங்க அரசு
புதிய கல்விக்கொள்கையை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் - மேற்கு வங்க அரசு

By

Published : Sep 8, 2020, 1:19 AM IST

'உயர் கல்வியில் மாற்றத்தை ஏற்படுத்தும் புதிய கல்விக் கொள்கை' எனும் தலைப்பில் ஆளுநர்கள் மாநாடு நடைபெற்றது.

என்.இ.பி தொடர்பான அந்த மெய்நிகர் கூட்டத்தில் மேற்கு வங்க கல்வி அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி கலந்துகொண்டார்.

அப்போது பேசிய அவர், "​​செம்மொழிகளின் பட்டியலில் வங்காளத்தை சேர்க்கக்கூடாது என்ற மத்திய அரசின் முடிவை மேற்கு வங்கம் கடுமையாக எதிர்க்கிறது.

மேற்கு வங்க மாநிலத்தின் இறைமை, உரிமை குறைத்து மதிப்பிடும் வகையில் மத்திய அரசு முன்னெடுத்து வரும் எதேச்சதிகார முடிவுகளை வன்மையாக கண்டிக்கிறோம்.

இப்போது, நாங்கள் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் கவனம் செலுத்தி வருகிறோம். மத்திய அரசும் அதில் ஈடுபட வேண்டும். என்.இ.பி குறித்து முடிவெடுக்கவோ, அதனை செயல்படுத்தவோ இது சரியான நேரமில்லை. அது குறித்து மாநில அரசுகளுடன் விவாதித்து பொறுமையாக முடிவெடுக்கலாம். எந்த அவசரமும் இப்போது எழவில்லை.

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை இந்தியாவின் கூட்டாட்சி கட்டமைப்பைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதால் அதனை தற்போதல்ல, எப்போதும் மேற்கு வங்க மாநிலத்தில் செயல்படுத்த அனுமதிக்கமாட்டோம்" என தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details