தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மண்ணுக்குள் புதைந்திருந்த 300 ஆண்டுகள் பழமையான சிவன் கோயில் கண்டுபிடிப்பு! - புதைந்த சிவன் கோயில்

அமராவதி: நெல்லூர் மாவட்டத்தில் மண்ணுக்குள் புதைந்திருந்த 300 ஆண்டு பழமையான சிவன் கோயில் கண்டறியப்பட்டுள்ளது.

சிவன் கோயில்
சிவன் கோயில்

By

Published : Jun 18, 2020, 5:15 AM IST

ஆந்திரா நெல்லூர் மாவட்டத்தில் உள்ள பெருமல்லபடு கிராமத்தின் பென்னா ஆற்றங்கரையில் அருகே மணல் குவாரியில் மணல் எடுக்கும் பணி நடைபெற்று வந்துள்ளது. அப்போது அங்கு மணல் தோண்டப்பட்டபோது மண்ணுக்குள் கோயில் கட்டடத் தடயங்கள் அங்கிருந்தவர்களுக்கு தெரிந்துள்ளது.

இதுகுறித்து அறிந்த அக்கிராம இளைஞர்கள் பலர் அக்கிராமத்தினருடன் ஒன்றுகூடி அப்பகுதியில் தோண்டினர். அப்போது அவர்களுக்கு மண்ணுக்குள் புதைந்திருந்த நாகேஷ்வரா சிவன் கோயிலின் எச்சங்கள் இருந்தது தெரியவந்துள்ளது. அந்தக் கோயிலின் கட்டடக் கலை 300 ஆண்டு காலம் பழைமையானது என்றும், 200 ஏக்கர் பரவளவு கொண்ட அந்தக் கோயில் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு மண்ணுக்குள் புதைந்து போனதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க:80 நாள்களுக்கு பின் திறக்கப்பட்ட திருப்பதி!

ABOUT THE AUTHOR

...view details