தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அதிகார குவியல் இல்லை, அதிகார பரவலே தேவை - மத்திய அரசை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள் - மோடி மத்திய அரசு

டெல்லி: கரோனா காலத்தில் முறையான நிர்வாகத்திற்கு அதிகார பரவலை மேற்கொள்ளாமல், அதிகார குவியல் எனும் ஜனநாயக விரோத செயலில் மத்திய அரசு ஈடுபடுவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

Opposition
Opposition

By

Published : May 23, 2020, 10:37 PM IST

கரோனா பாதிப்பு எனும் பேரிடரை இந்தியா எதிர்கொள்ளும் சூழ்நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நாடு முழுதும் உள்ள 22 கட்சித் தலைவர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினர்.

இந்தக் கூட்டத்தில் குடிபெயர்ந்த தொழிலாளர் சிக்கல், விவசாயிகள், சிறு, குறு தொழில்துறை சந்திக்கும் சவால்கள் ஆகியவைக் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் மதசார்பற்ற ஜனதா தளத் தலைவர் தேவகௌடா, சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே, தேசிவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மார்க்சிஸ்ட் கம்யூனில்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, ஜார்க்கண்ட் முதலமைச்சரும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தமிழ்நாட்டில் இருந்து திமுக தலைவர் ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோர் பங்கேற்றனர்.

22 கட்சித் தலைவர்கள் கானொலி மூலம் ஆலோசனை

இந்த விவாதத்தில் மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட கோடிக்கணக்கான அடித்தட்டு மக்களுக்கு உடனடித் தேவையான நேரடி பணவுதவியை அறிவிக்காமல் மத்திய அரசு பாராமுகமாக இருப்பது கண்டிக்கத்தக்கது. கரோனா காலத்தில் முறையான நிர்வாகத்திற்கு மாநில அரசுகளுக்கு உரிய நிதி அதிகார பரவல் உறுதி செய்யப்படவேண்டும். அதை மேற்கொள்ளாமல், அதிகார குவியல் எனும் ஜனநாயக விரோதச் செயலில் மத்திய அரசு ஈடுபடுவது முறையல்ல என எதிர்க்கட்சிக் கூட்டத்தில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இதையும் படிங்க:ஆம்பன் புயல் நிவாரணமாக மேற்கு வங்கத்திற்கு ரூ.1,000 கோடி!

ABOUT THE AUTHOR

...view details