பாஜகவில் உள்ள சில அரசியல்வாதிகள் காங்கிரஸ் கட்சித் தலைவர்களை விமர்சனம் செய்கிறேன் என்ற பெயரில் எந்த எல்லைக்கும் சென்று அவர்களை இழிவுபடுத்துவார்கள். அந்த வகையில், உத்தர பிரதேசத்தை சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் விக்ரம் சிங் சைனி இன்னும் ஒருபடி மேலே சென்று நேருவையும் அவர் குடும்பத்தாரையும் சேர்த்து இழிவுபடுத்தியுள்ளார்.
மோடியின் 69ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, விக்ரம் சிங் தனது பேஸ்புக் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்தைக் கூறியிருந்தார். அதில், ”பாரத தாயின் புகழை உயர்த்தும் நோக்கில் செயல்படுகிறார் மோடிஜி. மோடி பாரத தாயின் மகன்” என எழுதியுள்ளார். மேலும், அந்தப் பதிவை முடிக்கும்போது , மோடியை பெண் வழியில் வீழ்த்திவிடலாம் என நினைக்காதீர்கள், ஏனென்றால் அவர் மோடி; நேரு அல்ல, என்று எழுதியுள்ளார்.