தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

2025இல் ஆயுத உற்பத்தி இரு மடங்காக உயரும்... புதிய சட்டவரைவு வெளியீடு! - 2025ஆம் ஆண்டுக்குள் ஆயுத உற்பத்தியை இரு மடங்கு

டெல்லி: 2025ஆம் ஆண்டுக்குள் ஆயுத உற்பத்தியை இருமடங்காக உயர்த்தும் புதிய சட்டவரைவை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

ஆயுதம்
ஆயுதம்

By

Published : Aug 5, 2020, 6:15 AM IST

இந்தியாவில் ராணுவ தளவாடங்களில் தற்சார்பு அடைவது மற்றும் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் நோக்கில், பலமான பாதுகாப்பு தொழில்துறை தளத்தை உருவாக்குவதற்காக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் புதிய சட்டவரைவை வெளியிட்டுள்ளது.

அதன்படி, உள்நாட்டு ஆயுத உற்பத்தி மூலமாக அடுத்த 5 ஆண்டுகளுக்குள் ரூ.1.75 லட்சம் கோடி வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில், ரூ.35 ஆயிரம் கோடியை ஏற்றுமதி மூலம் பெற திட்டமிட்டுள்ளனர். போர் தளவாடங்கள் உற்பத்தி தொழில்துறையில் அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். நாட்டில் உள்ள சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கும், தொழில்முனைவோருக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இதுதொடர்பாக அரசு அலுவலர் ஒருவர் கூறுகையில், "ஆயுதப்படைகள் பல ஆண்டுகளாக பல்வேறு மூலங்களிலிருந்து பல தளங்களை வாங்கி உதிரிபாகங்கள் மற்றும் நுகர்பொருட்களை உருவாக்குவதற்கு வழிவகுத்தது. MoD-இன் வளங்களைப் பயன்படுத்துவதில் செயல்திறனை மேம்படுத்துவதற்கும் பல ஆண்டுகளாக பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு வரவு செலவுத் திட்டத்தில் பல்வேறு செலவினங்களை ஆராய்வதற்கும், மதிப்பீடு செய்வதற்கும், மேம்படுத்துவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

ஏரோ இன்ஜின்கள் வளாகத்தின் வளர்ச்சிக்குதான் முன்னுரிமை வழங்கப்படுகிறது. அடையாளம் காணப்பட்ட சில பிரிவுகள் மற்றும் தொழில்நுட்ப துறைகளில் ஒரு குறிப்பிட்ட கவனம் செலுத்தி புதிய முதலீடு ஊக்குவிக்கப்படும் என கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details