மருத்துவப் படிப்பில் சேருவதற்கான தேசிய மருத்துவத் தகுதி தேர்வான நீட் தேர்வு, செப்.13ஆம் தேதி நடைபெற்றது. இத்தேர்வை நாடு முழுவதிலும் இருந்து 14 லட்சத்து 37 ஆயிரம் பேர் எழுதினர். குறிப்பாக, தமிழ்நாட்டில் ஒரு லட்சத்து 13 ஆயிரம் பேருக்கும் மேல் தேர்வு எழுதினர்.
நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு! - National Testing Agency
டெல்லி: நாடு முழுவதும் தேசிய மருத்துவத் தகுதி தேர்வான 'நீட்' நுழைவுத் தேர்வு முடிவுகள் இன்று(அக்.16) வெளியாகின்றன.
நீட் தேர்வு முடிவுகள்
கடந்த மாதம் நீட் தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு, அக்.14ஆம் தேதி மறுதேர்வு நடந்தது. அதைத்தொடர்ந்து தேசிய தேர்வு முகமை, நீட் தேர்வு முடிவுகள் அக்.16ஆம் தேதி வெளியாகும் என அறிவித்தது. அதன்படி, இன்று நீட் தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளன. மாணவர்கள் ntaneet.nic.in எனும் இணையதளம் வாயிலாக தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க:நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் 16ஆம் தேதி வெளியீடு!